சிறைக்குள் சிக்கிக் கொண்ட

உடலின் உறுப்பு எவற்றிக்கேயும் அடிமையானால்
உபத்தரங்கள் உதிரத்தையே உதிரச் செய்யுமே
பவித்திரத்தை பலமுள்ளவரை பலப்படுத்திடின்
பரிகாசம் கொள்ள வேண்டிய பாப நிலை வராதே
தரித்திரத்தை துரத்திவிட்டால் தரமான வாழ்வு சூழுமே
காமம் நம்முள் எழுந்து காவடி எடுத்து ஆடுங்கால்
கருத்தை அதன்மேல் காட்டாமல் நின்று நிதானிப்பின்
கடும்பழியில் விடுபட்டு கற்பக விருட்சபாதை தெரியுமே
சிறு உற்சாக சிறைக்குள் சிக்கிக் கொண்டால் நமக்கு
சித்தம் சிதைவடைந்து செயல்படாத நிலை வருமே
கத்தியை நெற்றியில் வைத்து கல்லில் முட்டியது போல்
பத்திய உடலுக்கு பொருந்தா எப்பழக்கமும் இருக்குமே
முறையற்றவைகளை முற்பொழுதில் பழகிவிட்டால்
முடமாக்கும் அவைகள் வாழ்வை பிற்பகலில் உறுதியே.
- - - - நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (16-Nov-20, 7:38 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 46

மேலே