நுங்கு போல நீ
மேககாதலியோடு நடந்த
சண்டையில் சூடான கதிரவன்
தன்கோபத்தையெல்லாம்
வான வீதியில் கொட்ட
அந்த அனல் தாங்கமுடியாமல்
கொதித்துப்போய் நான் வரும்போது
நுங்கு போல குளிர்ச்சியான
உன் வார்த்தையால்
உச்சி வெயில் கூட
உற்சாக வெயில்தான் எனக்கு
என் அன்பே !!