நான் மட்டும் முட்டாளல்ல

எதார்த்த பார்வைகள்...
எப்போதாவது பேச்சு...

இருமுறை கைப்பேசி அழைப்பு...
ஒருமுறை வாழ்க்கைப் பற்றிய
உரையாடல்...

எண்ணிவிட்ட கோபம்...
எண்ண இயலாத புன்னகை...

அனைத்தும் எனக்கு
அவள் கொடுத்த பரிசுகள்.

பரிசுகளின் அர்த்தம்
காதலென நினைத்து...
அவளின் பின் நடைபோட்டேன்

சில நிழல்கள் தடுக்கி
திரும்பிப் பார்த்தேன்
என்னைப்போன்று சில ஆண்கள்...

உணர்ந்துகொண்டேன்
காதலென நினைத்தது
நான் மட்டும் அல்ல...
என்னைப்போன்ற சிலரும்.

எழுதியவர் : ஆரியன் (23-Nov-13, 1:05 pm)
பார்வை : 70

மேலே