இளைய காதல்
நிலவொன்று கண்டேன் அதில் - என்
நினைவற்று போனேன்...
நிம்மதி அவளில் தேடி - என்
நின்னை தொலைத்து நின்றேன்...
நேற்று அந்த நாளை - என்
நெஞ்சுக்குள்ளே விதைத்தேன்...
நேரம் தூரம் இல்லையென்று - என்
நெஞ்சம் உருகி நின்றேன்...
உலகம் என்ற வட்டத்தின் - உள்ளே
நானும் ஒழிந்தேன் என்...
உயிரே அவள் தான் என்ற - புது
உண்மை அன்று படித்தேன்...
வாழ்க்கை என்றால் நீயே - என்ற
வார்த்தை அவளில் கேட்டேன்...
வாழ்வதே கொஞ்சம் என்று - உயர்
வானம் தொட்டு பறந்தேன்...
எப்போதும் இல்லா ஆனந்தத்தில் - நான்
ஏழிசையும் இசைத்தேன் ...
எல்லாம் பொய்யென்று - ஆனால்
எப்படி நானும் வாழ்வேன்???