malini1 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : malini1 |
இடம் | : |
பிறந்த தேதி | : 23-Mar-1983 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Aug-2012 |
பார்த்தவர்கள் | : 299 |
புள்ளி | : 112 |
- கவிதையில் பல
கற்பனைகள் செய்வேன்...-
-கனவுக்குள் சில
சொப்பனங்கள் கொய்வேன்-......
தாகம் என்று கொஞ்சம்
வேகமாய் ஓட
போகும் வழியில்
கானல் நீரால் சோகம்....
இதயம் துடிக்க
இடப்பக்க அறை இருந்தும்
இன்று அறைகள் மூட
அனாதையாய் என் இதயம்....
உன்னை கொஞ்சம்
உரசி ப்பார்க்கிறேன்
நெருப்பாய் கோபம்
உன் தேகம் எங்கும்....
அதையும் தாங்கி
உன் கைகள் பற்றவே
ஆசை இதயம் உன்னில்
இற(மறி) க்கிறது தினம்.....
விழி இமைக்காமல்
விழிக்கின்றேன் இரவில்...
வலி தெரியாமல்
அழுகின்றேன் கனவில்....
காரணம் புரியாமல்
கவிதை எழுதுகிறேன்...
காயப்பட்ட இதயம் ஆகையால்
கண்ணீர் வடிக்கிறேன்....
கூடும் ரணங்களால்
குத்தகை ஆகிறேன்...
விடையில்ல கேள்விகளால்
சிக்கித் தவிக்கிறேன்....
பார்வையின் ஓரத்தில் தான்
பரிதவித்து போகிறேன்...
விழிநீர் ஈரத்தில் நான்
முழுவதும் நனைகிறேன்....
அருகில் ஆபத்தை
விரும்பி ஏற்கிறேன்...
திரும்பி பார்க்கையில்
தெருவில் கிடக்கிறேன்....
அன்பின் ஆழத்தில்
கலப்படம் காண்கிறேன்...
அதனால் தான் இன்று
அனைத்தையும் வெறுக்கிறேன்....
ஒருமுறை தொலைந்ததால்
உன்னில் பலமுறை
உண்மையில் நடந்ததொன்று...
உலகம் அறிந்ததொன்று.....
நிஜம் மறைந்தது கண்டு...
நிலைமை தலைகீழ் இன்று.....
மனம் நொந்தது கண்டு...
மகிழ்ச்சி தொலைந்தது இன்று.....
தப்பின்றி தவிப்பது கண்டு...
தணல் போலாகுது உள்ளம் இன்று....
என் அறியாமையை கண்டு...
நானே அழுகின்றேன் இன்று....
வீணே பழி சுமப்பது கண்டு...
தானே நிற்குது மூச்சும் இன்று.....
நிஜம் அறியாத நிழல்கள் சேர்ந்து...
நினைப்பதை எல்லாம் பேசுது இன்று.....
உண்மை என்றும் சாகாது என்று...
உரைத்திருந்தார் நம் பாரதி அன்று.....
தூரே தெரியும் கானல் நீரும்...
அருகே சென்றால் காணாமல் போகும்....,
அநியாயம் பேசும் ஊரும் பேரும்...
அதை நினைத்து ஒர்ந
நிலவொன்று கண்டேன் அதில் - என்
நினைவற்று போனேன்...
நிம்மதி அவளில் தேடி - என்
நின்னை தொலைத்து நின்றேன்...
நேற்று அந்த நாளை - என்
நெஞ்சுக்குள்ளே விதைத்தேன்...
நேரம் தூரம் இல்லையென்று - என்
நெஞ்சம் உருகி நின்றேன்...
உலகம் என்ற வட்டத்தின் - உள்ளே
நானும் ஒழிந்தேன் என்...
உயிரே அவள் தான் என்ற - புது
உண்மை அன்று படித்தேன்...
வாழ்க்கை என்றால் நீயே - என்ற
வார்த்தை அவளில் கேட்டேன்...
வாழ்வதே கொஞ்சம் என்று - உயர்
வானம் தொட்டு பறந்தேன்...
எப்போதும் இல்லா ஆனந்தத்தில் - நான்
ஏழிசையும் இசைத்தேன் ...
எல்லாம் பொய்யென்று - ஆனால்
எப்படி நானும் வாழ்வேன்???