தவிப்பு
தாகம் என்று கொஞ்சம்
வேகமாய் ஓட
போகும் வழியில்
கானல் நீரால் சோகம்....
இதயம் துடிக்க
இடப்பக்க அறை இருந்தும்
இன்று அறைகள் மூட
அனாதையாய் என் இதயம்....
உன்னை கொஞ்சம்
உரசி ப்பார்க்கிறேன்
நெருப்பாய் கோபம்
உன் தேகம் எங்கும்....
அதையும் தாங்கி
உன் கைகள் பற்றவே
ஆசை இதயம் உன்னில்
இற(மறி) க்கிறது தினம்.....