கானல் நீர்
உண்மையில் நடந்ததொன்று...
உலகம் அறிந்ததொன்று.....
நிஜம் மறைந்தது கண்டு...
நிலைமை தலைகீழ் இன்று.....
மனம் நொந்தது கண்டு...
மகிழ்ச்சி தொலைந்தது இன்று.....
தப்பின்றி தவிப்பது கண்டு...
தணல் போலாகுது உள்ளம் இன்று....
என் அறியாமையை கண்டு...
நானே அழுகின்றேன் இன்று....
வீணே பழி சுமப்பது கண்டு...
தானே நிற்குது மூச்சும் இன்று.....
நிஜம் அறியாத நிழல்கள் சேர்ந்து...
நினைப்பதை எல்லாம் பேசுது இன்று.....
உண்மை என்றும் சாகாது என்று...
உரைத்திருந்தார் நம் பாரதி அன்று.....
தூரே தெரியும் கானல் நீரும்...
அருகே சென்றால் காணாமல் போகும்....,
அநியாயம் பேசும் ஊரும் பேரும்...
அதை நினைத்து ஒர்நாள் நோகும்.....
மனதோடு மழைக்காலம் தந்து...
மகிழ்கின்ற பலரும் உண்டு.....
உயிரோடு வலிகளை தந்து...
புதைக்கின்ற சிலரும் உண்டு.....
என் நிலை மாறும் காலம் வரும்...
நிஜம் அன்று உயிர் பெரும்.....
குறை கண்ட கூட்டம் தோறும்...
கூடி நின்று மெய் அறியும்.....