விடை தேடும் வினாக்கள்

விழி இமைக்காமல்
விழிக்கின்றேன் இரவில்...
வலி தெரியாமல்
அழுகின்றேன் கனவில்....

காரணம் புரியாமல்
கவிதை எழுதுகிறேன்...
காயப்பட்ட இதயம் ஆகையால்
கண்ணீர் வடிக்கிறேன்....

கூடும் ரணங்களால்
குத்தகை ஆகிறேன்...
விடையில்ல கேள்விகளால்
சிக்கித் தவிக்கிறேன்....

பார்வையின் ஓரத்தில் தான்
பரிதவித்து போகிறேன்...
விழிநீர் ஈரத்தில் நான்
முழுவதும் நனைகிறேன்....

அருகில் ஆபத்தை
விரும்பி ஏற்கிறேன்...
திரும்பி பார்க்கையில்
தெருவில் கிடக்கிறேன்....

அன்பின் ஆழத்தில்
கலப்படம் காண்கிறேன்...
அதனால் தான் இன்று
அனைத்தையும் வெறுக்கிறேன்....

ஒருமுறை தொலைந்ததால்
உன்னில் பலமுறை இறக்கிறேன்...
கறை படிந்த உன் அன்பில்
மீண்டும் சிறைப்பட்டுப் போகிறேன்???????????...

எழுதியவர் : MALINI (27-Nov-13, 8:57 pm)
பார்வை : 189

மேலே