எங்கும்,எதிலும் என் காதலே
உடல் ஒட்டிய வயிறு...
கண்ணீர் தீர்ந்த கண்கள்...
உயிர் பிரிந்த உடல்...
உடலைத் தின்ற பசி...
உறக்கம் வெறுத்த வாழ்க்கை...
உலகை தள்ளிய மனம்...
நினைவுகளுடன்
நடைபோடும் கால்கள்...
அவள் பெயரை எழுத மட்டும்
நீளும் கரம்...
இவையெல்லாம்
தேவைதான் எனக்கு.
என் எழுத்துக்கள் மட்டுமல்ல
என்னுடலின் ஒவ்வொரு அங்கமும்
அவள்மீதுள்ள என் காதலை மட்டுமே
வெளிப்படுத்த வேண்டும்.