கோடையில் ஓர் அடைமழை

குடைக்குள் மழை அல்ல
இது அடைமழையான கோடை.,
கோடையில் ஓர் அடைமழை

இரக்கமில்லா அரக்கன் இவன்
வாட்டி வதைக்கும் வஞ்சகன் இவன்,
இவ்வாறு தான் தன் கடமை
தவறா கதிரவனை காய்ச்சியோர் எத்துணை பேர்?

காதில் விழுந்து விட்டதோ என்னவோ பொல்லா கோபக்காரன் ஓடி ஒளிந்து கொண்டு விட்டான் கார்மேகத்துக்குள்ளே வர மறுத்து.,

ஞாயிறு ஞாயிறு கேட்டால் பூமாதேவி என்னவாகுவாள்? கிளம்பி வந்து விட்டான்
வருண பகவான் பஞ்சாயத்துக்கு!

நீண்டநாள் கண்டிரா என் மழைத்தோழியை
சந்தித்து விட்டேன் நான் இச்சர்ச்சையில்

முதல்துளியாய் அழுத்தமாய்
என் நெற்றியில் பதித்து.,என்னடி எப்படி இருக்கிறாய்? என்றாள் என் அன்புதோழி,

தனிமை தகர்க்கிறதடீ நட்பு நெஞ்சம்
யாரும் பக்கமில்லையடீ என்றேன் நான்...

அடீ கிறுக்கி இதற்கேன் வாட்டம் பக்கமில்லா நிலையில் தான் நட்பு பலப்படுமடி நம் நட்பு போல் என்றாள் அவள், அறிந்தும் ஏற்க மறுத்தேன் நான்.,

விடுவாளா அவள் என் தோழி ஆகிற்றே புரிய வைத்தே தீர்வேனேன்று பிரிவு உடம்பிற்கே உயிர்நட்பிற்கு இல்லை என அடைமழையாய் வெளுத்து வாங்கிக் கொண்டு இருக்கிறாள்
தன் தண்ணீர்த்துளிகளால்.,

புரிந்தும் மௌனம் காக்கிறேன்
அவளின் அன்புமழை நின்றிட கூடாதென்று,,
காய்ந்து போன களிமண்
குழைந்து தான் போகட்டுமே என்று,
தீர்ந்துதான் போன ஏரியெல்லாம்
நிறைந்து போகட்டுமென்று,
வாடி போன விவசாயி முகமெல்லாம்
நெகிழ்ந்து தான் போகட்டும் என்று,

மீண்டும் கதிரவன் கோபம் கொள்வது எப்பொழுது,பஞ்சாயத்துக்கு வருணபகவான் வருவது தான் எப்பொழுது, நான் மீண்டும் என்று சந்திப்பேன்என் ஆருயிர் தோழியை என தெரியாததால்.,

மௌனம் காக்கிறேன்...
இன்னும் சற்று நேரம் தான் முயற்சி
செய்யடி எனக்கு புரிய வைக்க
என மௌனமாய் நான் இங்கு
மௌனம் காக்கிறேன்...

எழுதியவர் : bhuvana muthukrishnan (13-May-14, 11:15 am)
பார்வை : 113

மேலே