நந்தவனத்தேரு எங்க ஊரு0024
நந்தவனத்தேரு எங்க ஊரு
நல்லவனாய் வாழ்ந்து
கேட்கணும் நல்ல பேரு
ஆற்றங்கரை காற்று
வந்து வனப்புடன் மோதும்
ஆலமரக்காற்று ப்போல
ஆனந்தமாய் மனசு குளிரும்
பசுக்கள் கூட்டம்
பசுமையாய்த்திகழும்
பசியோடு வருவோரின்
பட்டினியை போக்கும்
சாணம் மொளுகிய திண்ணையில்
சந்தணம் மனக்கும்
சலனமில்லாமல் சாந்தமாயிருக்கும்
ஆனாதையென யாருமில்லை
அணைக்கும் அம்மாக்கள் இருக்கும் ஊரினிலே
முன்னவன் வகுத்தானென
பின்னவன் புறக்கணிக்காத
பண்பாடு ,கலாச்சாரம் விழுமியங்களை
விசமிகள் கூட்டம்
இல்லாதொழிக்க வந்தால்
எங்கள் ஊர் நன்றியுள்ள
பிராணிகூட கடித்துக்குதறும்