வெறுமை

மழையற்ற சில நாளில்
அந்தச்சாலையில் மனிதர்களை பார்த்திருக்கிறேன்
சிலர் வேகமாகவோ சிலர் மெதுவாகவோ
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்.
சிலர் சிரித்துக்கொண்டும்
சிலர் யோசித்துக்கொண்டும்
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்.
காரணமற்று சிலரும்
காரணம் கொண்டு சிலரும்
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்
சிலர் கூட்டமாகவும்
சிலர் தனித்தனியாகவும்
பயணிப்பதை பார்த்திருக்கிறேன்.
ஆனால் மழைநாளில்
அந்தச் சாலை வெறுமையாயிருக்கிறது.

எழுதியவர் : வன்மி (13-May-14, 7:54 pm)
Tanglish : verumai
பார்வை : 120

மேலே