ஆண் பெண் நட்பு

கைக்கோர்த்து நடக்கும்
தருணங்கள் நிச்சயம்
இருமனத்திலும் சகோதர
தன்மை உணரப்படும்
நட்புக்கு நல்வழிப்பாதை
நிச்சயம் காட்டும் ...
உணர்வுகள் நிச்சயம்
புரிந்துக்கொள்ளப்படும் .....
நன்மை தீமைகள்
என்னவென்று உணரவைக்கும்
ஆயிரம் உறவுகள்
ஆயிரம் குற்றம் சொன்னாலும்
தவறான எண்ணங்கள்
ஒருபோதும் நெஞ்சில்
இல்லாத உறவுகள் .....
நட்பின் உறவுகள்
இணைத்திருந்தாலும்
பிரிந்தாலும் நட்பின்
சுகமான நினைவுகள் மாறாது .....