பாரதியின் செல்லமா
வாசித்தல் அவனுடைய
சிறந்த பொழுதுப்போக்கு அல்ல
புத்தகங்கள் மீது காதலும் இல்லை
எனினும் என்னை
ஒரு எழுத்தாளனாய் செதுக்கினான்
அஃதே நட்பு
என் வெற்றிகளில்
அவன் நிறைவு கொண்டான்
என்னை
இறைவியாய் கண்டான்
முட்டை ஓட்டுக்குள் சுருங்கிய என்னை
பிரபஞ்சமாய் விரிய வைத்தான்
என் சிறகுகளை
உணர வைத்தான்
'என்னுள்' உற்று நோக்க வைத்தான்
என் பார்வையின் சூட்டில்
என் தேவை கரைய
சமுதாயம் குளிர வைத்தான்
நான் பாரதியாய் உருமாற
'செல்லமா' வாக நின்றான் அவன்
அஃதே நட்பு …