நட்பும் - தோழமையும்
நட்பும் - தோழமையும்
நம் இதயத் துடிப்பு நின்றாலும்
நண்பன் வந்தால் உயிர்த்தெழுமே
நம் சுவாசக் காற்று நம்மை விட்டாலும்
நட்பு அழைத்தால் உடன் வந்திடுமே
தோழமை என்ற சொல்லுக்கு
தெய்வாம்சம் என்ற பொருளுண்டு
தோழன், தோழி இடையினிலே
மெல்லியதாக ஒரு இழையுண்டு
ஆண்டவன் பார்வையின் முன்னலே
இந்த தோழமை என்றும் இருப்பதுண்டு
நட்பின் இறுக்கம் புரியாது
மற்றவர் பார்வைக்கு தெரியாது
அவரவர் ஆன்மா புரிதலிலே
நட்பின் இலக்கணம் வெளிப்படுமே
நட்பில் இருக்கும் ஆனந்தம்
சொல்லில் விளக்கம் அடங்காது
நட்பில் நிகழும் குறும்புகளும்
நம் துன்பத்தை அறவே விரட்டிடுமே
நல்ல உள்ளத்தின் வெளிப்பாட்டால்
தோழமை நீளும் காலம்தோறும்
நட்பை நானும் போற்றுவதால்
என் எழுத்தும் உற்சாகம் பெறுகிறது
இதைப் படிக்கும் எனது நட்புகளுக்கு
தினமும் தெய்வத்தின் அருளுண்டு
இதைப் படிக்கும் தோழமைக்கோ
தெய்வமும் அவர்கள் வீட்டினில் தவமிருப்பதுண்டு