உயிர் வருக்கம் -காதல்

அறிவற்ற ஞானி
காதல் !
ஆசையற்ற குமரி
காதல்!
இலக்கணமற்ற மொழி
காதல் !
ஈதை அற்ற வலி
காதல் !
உவமையற்ற கவிதை
காதல் !
ஊனம் அற்ற ஊனம
காதல் !
எடையற்ற இமயம்
காதல் !
ஏடுடற்ற கல்வி
காதல் !
ஐயமற்ற கோழை
காதல் !
ஒளியற்ற‌ காலை
காதல் !
ஓய்வற்ற சோம்பல்
காதல் !
ஔடதமற்ற பிணி
காதல் !
அஃதே காதலில்
முரணும் அழகே !

©s.jai

எழுதியவர் : Jaya Ram Kumar (16-Feb-20, 5:43 pm)
சேர்த்தது : S.ஜெயராம் குமார்
பார்வை : 105

மேலே