முத்தம்😘

முத்தம்😘

அவன் திடீரென்று தந்த முத்தத்தால் ஒரு நொடி திக்குமுக்கு ஆகிவிட்டேன்.
ஏன் அப்படி செய்தான்.
அந்த உரிமையை யார் அவனுக்கு கொடுத்தது.
காதல் பாதையில் இருந்து தடம் மாறுகிறானா
அவனின் அந்த செயலால் அந்த நிமிடம் எனக்கு ஏற்பட்டது உண்மை கோபமா
அவன் என் மீது ஆளிவில்லா உரிமையில் தான் அவ்வாறு செய்தானா
ஸ்பரிச சம்பாஷனைகள் காதலில் மிகவும் சகஜம் தானே
நான் ஏன் பின் அவனிடம் அப்படி கோபப்பட்டேன்
காலகாலமாக தமிழ் பெண்ணின் ரத்தத்தில் ஊரிய கலாச்சாரமா
அல்லது உரிமை மீறளில் கற்பு அதற்கு பங்கம் வந்துவிடம் என்ற பயமா
அப்போது அவன் காதல் உண்மை இல்லையா
அவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லையா
எல்லோருமே என்னை போன்று யோசிப்பார்களா
ஒன்று மட்டும் புரிந்தது
காதலின் பயணம் கல்யாணத்தை நோக்கி நகர்வதால்
இந்த வீனான பதட்டமெல்லாம்
இன்னொரு உண்மையும் உண்டு
அவன் முத்தமிட்ட அந்த நொடியில்
நான் எதிர்வினை ஆற்றினாலும்
எங்கோ ஒரு மூலையில் என் மனம் அந்த அவன் செயலால் பூரிப்பு அடைந்தது உண்மை.
அந்த நிகழ்வு மீண்டும் ஒரு முறை அவன் நிகழ்த்துவானா என்ற எண்ணமும் ஆழ்மனதில் மன்னலென வந்து போகிறது.
அப்படி என்ன தவறு செய்து விட்டான்
முத்தம் காதலின் அச்சாரம் தானே
என்னவனே என்னை மண்ணித்து விடு
உன் நேர்மையில் எள் முனையும் சந்தேகம் இல்லை
உன்னை என் மனதில் பத்திரமாக
பூட்டி வைத்திருக்கும் உன் அன்பு
காதலி.
- பாலு.

எழுதியவர் : பாலு (16-Feb-20, 7:36 pm)
சேர்த்தது : balu
பார்வை : 1312

புதிய படைப்புகள்

மேலே