இதயத்தால் என்னை சிறை எடுத்தவளே 555

ப்ரியமானவளே...


சன்னலோர இருக்கையில்
நான் தலைசாய்த்தாலே...

நாம்
ஒன்றாக பயணித்த...

அந்த நினைவுகள்
என்னை தாலாட்டுதடி...

வண்ணம் பூசிய உன்
இதழ்களின் தூரிகையால்...

என் கன்னங்களில் நீ
ஓவியம் வரைந்திடடி...

குறைவான வரவு
அதிக செலவுபோல...

சில நிமிடங்களே நீ
என்னுடன் பேசி சென்றாலும்...

உன் நினைவுகளே எனக்குள்
அதிகமாக நாள் முழுவதும்...

உன் இதயத்தால்
என்னை சிறை எடுத்தவளே...

மணமாலை சூடி நான்
உன்னை சிறையெடுக்க...

நீ நாள் ஒன்று
சொல்லடி கண்ணே.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (16-Feb-20, 8:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 353

மேலே