மாலை நேரம்

மாலை நேரம் பொன்மாலை நேரம்
பரிதி மெல்ல மேற்கில் மறைய
வானைப் பொன்னாக்கி போன நேரம்
மதி மயக்க மதி வானில் உலாவி வர வரும் நேரம்
தடாகமெல்லாம் அல்லி அலர்ந்து பொங்கும் நேரம்
காதலர் மனதிற்கு உகந்தநேரம்
பகலெல்லாம் உழைத்து அலுத்த உள்ளங்கள்
உறங்க நினைத்து வீடு திரும்ப அவர்க்கு
தாலாட்டு பாடும் இனிய நேரம்
மல்லியும் முல்லையும் மலர்ந்து
விண்வரை வாசம் சேர்க்கும் நேரம்
இனிய தென்றல் வீசும் நேரம்
இதனால் இது பொன்மாலை நேரம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-Feb-20, 8:52 pm)
Tanglish : maalai neram
பார்வை : 159

மேலே