மௌனமாய் ஒரு புலம்பல்

உன்னோடு பழகிய இந்த
சில கால நினைவுகள்..
இன்னும் எத்தனை காலங்களுக்கு
என் மனதை அறுத்துக் (அரித்துக்)
கொண்டு இருக்க போகிறது
என்று தெரியவில்லை..

மறப்பது சாத்தியமில்லை..

ஆசையாய் அழகாய் அன்பாய்
சிறிது சிறிதாய் உணர்வோடு உருகி
கிரங்கி கடந்த நாட்களின் நினைவுகளை,
மறப்பது சாத்தியமா என்ன ??
அதோடு,
நீ வீசி எறிந்த வார்த்தைகளையும்
மறப்பதும் சாத்தியமில்ல..
அவைகள் இன்னும்
என் மனதை முற்களாய்,
துளைத்துக் கொண்டு தான் உள்ளது..
உன்னால் எப்படி முடிந்தது
இப்படிப்பட்ட வார்த்தைகளை பேச..
எவ்வாறு நீ நினைத்தாய்
அது தரும் வலியை என்னால்,
தாங்கிக் கொள்ள முடியும் என்று..
உனை நேசித்த இதயம் அல்லவா இது..
நேசித்தர்கான தண்டனையா இது..

உன்னோடு பழகியது சில காலம் என்றாலும்,
அதில் இருக்கும் நினைவுகள் ஓராயிரம்..
மீண்டும் எப்படியாவது,
மீட்டுக் கொள்ளவே முயறிச்சிக்கிறேன்..
தினமும் காலையில் எனை எழுப்பும்
உன் அலைபேசியின் அழைப்பையும்..
உன் குரலின் ஒலியில்,
நான் கண் விழித்த நாட்களையும்..
எனை தேடி அலையும்
உன் விழிகளையும்..
உனை சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளை
நான் தவற விடாத நாட்களையும்..
உன் குரல் கேட்கும் திசை தேடி
நான் ஓடி திரிந்த தருனகைளையும்..
உன் இதயத்தில்
எனக்கான இடத்தையும்..
நான் துலைத்த
என் இதயத்தையும்..
மீட்டுக்கொள்ளவே முயறிச்சிக்கிறேன்,
மீண்டும் வராது என அறிந்தும்..

என்னவனாய் பார்த்து பழகிய,
என் கண்களுக்கு,
இன்று உனை யாரோ போல்
பார்க்க தெரியவில்லை..
என்னதான் நான்
சாமாதானம் சொல்லிக் கொண்டாலும்,
நீ என்னவன் அல்ல என்பதை
என் மனம் இன்னும் ஏற்க மறுப்பது ஏன்?

இனிமேலும்,
உன் வெறுப்பை சம்பாதிக்க கூடாது என்று,
என்னுள் இருக்கும் உணர்வுகளை,
எனக்குள்ளே புதைத்து விட்டு,
ஏதும் இல்லாதது போல்,
நடிக்கக் தொடங்கி விட்டேன்..

உன் மனதை தட்டித் திறக்க,
போதிய சக்தி இல்லாமல்,
விலகியே நிற்கின்றேன்..

உன்னோடு பேச நினைக்கும்
அத்தனை வார்த்தைகளும்
என் மனதோடு நின்று,
பெரும் பூகம்பத்தை ஏற்படுத்துகிறது..
இந்த வேதனை, எனக்கு புதிது அல்ல,
இது போன்ற வேதனையை அனுபவிக்கும்,
கடைசி இதயமும் எனதல்ல, இந்த பூமியில்..
அத்தனையும் அறிந்தும்..
மீள முடியாமல் தவிக்கின்றேன்..
முழுமையாய் உடைந்து சிதறும் முன்,
எனை மீட்க வந்துவிடு,
இந்த வலியில் இருந்து,
எனக்கு விடுதலை தந்துவிடு..

எழுதியவர் : -மாசி. ஷோபனா (16-Feb-20, 2:39 pm)
சேர்த்தது : Shobana
பார்வை : 228

மேலே