எப்பொழுது திரும்பி வருவாள்

காதல் காற்றில் அவள் வாசம்
வீசிட
என் வாசல் தாண்டி சென்றாள் ,

வாசம் நுகர்ந்து அவளை காணச் சென்றேன்
அவளோ
யாக்கை தீண்டி சென்றாள் ,

தேகம் தீண்டியவளை தேடி சென்றேன் ,
அவளோ
ககனம் பார்க்க வைத்தால்

நீரூபம் பார்க்க வானவில் காட்டி
அவளோ
என்னை நீங்கி சென்றாள்

வானவில் காட்டிய அவளின் வண்ணம்
என்னவென்று
வியந்து ஏங்கி நிற்கின்றேன் ,

எப்பொழுது திரும்பி வருவாள் என்று
பொழிந்தும் பொழியாமல்
சென்ற
மழையாகிய அவளை எண்ணி !

எழுதியவர் : பாலாஜி (16-Feb-20, 1:56 pm)
சேர்த்தது : balaji9686
பார்வை : 149

மேலே