balaji9686 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  balaji9686
இடம்:  srivilliputtur
பிறந்த தேதி :  09-Jul-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2013
பார்த்தவர்கள்:  216
புள்ளி:  34

என் படைப்புகள்
balaji9686 செய்திகள்
balaji9686 - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2020 1:56 pm

காதல் காற்றில் அவள் வாசம்
வீசிட
என் வாசல் தாண்டி சென்றாள் ,

வாசம் நுகர்ந்து அவளை காணச் சென்றேன்
அவளோ
யாக்கை தீண்டி சென்றாள் ,

தேகம் தீண்டியவளை தேடி சென்றேன் ,
அவளோ
ககனம் பார்க்க வைத்தால்

நீரூபம் பார்க்க வானவில் காட்டி
அவளோ
என்னை நீங்கி சென்றாள்

வானவில் காட்டிய அவளின் வண்ணம்
என்னவென்று
வியந்து ஏங்கி நிற்கின்றேன் ,

எப்பொழுது திரும்பி வருவாள் என்று
பொழிந்தும் பொழியாமல்
சென்ற
மழையாகிய அவளை எண்ணி !

மேலும்

balaji9686 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2016 9:09 pm

கவிதை ஒன்று எழுதினேன்
என்றேன் ,
காதல் கவிதையா என்கிறாள் ,
காதலும் இல்லை காதலிக்கவில்லை
என்றவள் ,
கவிதை என அவள் பெயர் எழுதிய காகிதம்
பார்த்தவள்,
முனுமுனுத்து செல்கிறாள் முக்காடு
அணிந்து கொண்டு ,
வெட்கத்தை மறைக்க அணிந்த முக்காட
இல்லை ,
வெயிலின் வெக்கைக்கு அணிந்த முக்காட
என விடை அறியாமல்,
விழி நகராமல் நிட்கிறேன்
வழிந்தோடும் வியர்வை துளிகளோடு !

மேலும்

balaji9686 - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2015 12:10 am

இன்றைய பொழுதில் இது அவனுக்கு
பத்தாவது பேருந்தாக இருக்க கூடும்...

கையில் ஏந்திய மல்லிப் பூவும்
வாயில் மல்லிப் பூ என்ற வார்த்தையும்
அவன் போகும் இடமெல்லாம்
பூத்துக் கொண்டே இருக்கிறது...

ஒரு நாள் பூவை
விதவை எனத் தெரியாமல்
விற்க முயன்றதற்காக அவன்
வருத்தப் பட்டுக் கொண்டதும் உண்டு...
அதை விட
இறந்த பிணத்திற்கு பூ தூவும் சமூகம்
உயிருள்ள பெண்ணிற்கு
மறுக்கும் மடத்தனத்தைக் கண்டு
கோவப் பட்டதும் உண்டு
இன்னும் அதை விட
ஒரு வேலை தானே இறந்தால் கூட
பூ விற்றவன் மனைவிக்கே
பூ இல்லையோ என்று கலங்கியதும் உண்டு....

பண்டம் மாற்றும் முறை
இப்போதும் இருந்திருந்திருந்தால்
அவன் மிகவும் சந்தோசப

மேலும்

பண்டம் மாற்றும் முறை இப்போதும் இருந்திருந்திருந்தால் அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்... பள்ளி கட்டணத்திற்கு அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை... அருமையான வரிகள் தோழரே .................... 11-Dec-2015 11:20 pm
பண்டம் மாற்றும் முறை இப்போதும் இருந்திருந்திருந்தால் அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்... பள்ளி கட்டணத்திற்கு அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை... வார்த்தைகளின் கனம் வலித்திடச் செய்கிறது தோழமையே..... 10-Dec-2015 1:27 pm
மிக்க நன்றி... சார்.. தாங்கள் வந்ததே இந்த கவிதை பெருமை பெற்றது... தங்களின் புரிதல் கருத்தில் மிக்க மகிழ்ந்தேன்... மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்தில்... பேசுவோம் சார்... 25-Nov-2015 11:34 pm
"பண்டம் மாற்றும் முறை இப்போதும் இருந்திருந்திருந்தால் அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்... பள்ளி கட்டணத்திற்கு அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை..." "ஒவ்வொரு முறை பசிக்கும்போதும் அளந்துக் கொண்டே இருப்பான் அவன் வயிற்றையும் அன்று விற்காத பூச்சரத்தையும்... " -------- அருமையான மிக ஆழமான வரிகள் ஜின்னா..! பூவைப் பற்றி இருந்தாலும், கவிதை இரும்பாய்க் கனக்கிறது..! இது குறித்து இன்னும் பேசுவோம்..! 24-Nov-2015 2:37 pm
balaji9686 - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Nov-2015 7:42 pm

விடியும் நாழிகையில் வெய்யோன் விடிவதில்லை,
மறையும் தருணத்தில் பகலவன் மறைவதில்லை ,
இறைகண்ட காகங்களின் உறைவிடம் காணவில்லை ,
குயில்கள் பாடும் பாடல்கள் கேட்பதில்லை ,
மயில்கள் நடனமாட கார்முகில் சூழ்வதில்லை,
கலையும் மண்ணிலம் இனி நிலைபதில்லை,
சோழகம் சுகமாய் தேகம் வருடுவதில்லை,
வாசமில்லா வாயுவின் சுவாசம் உணரவில்லை ,
முப்போகம் விளைய மாரி பொழிவதில்லை ,
உழைப்பாளி களைப்பாற சாயை கிடைப்பதில்லை,
மரங்கள் இல்லா இயற்கை இல்லை ,
இயற்கையே இங்கு இயற்கையாக இல்லை ,
செயற்கை இல்லா இயற்கை இல்லை ,
இயற்கையான மரங்களை உயிராக வளர்ப்போம்
இயற்கையை இயற்கையாக பேணி பாதுகாப்போம்

மேலும்

balaji9686 - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2015 8:52 pm

விழியோடு ஒரு ஏக்கம் தந்தது,
மனதோடு வந்த தாக்கம்.
பிரிந்த அன்பே நீ வருவாயா!
பிரிவால் வந்த ஏக்கம் கண்டு,
இசையும் ஸ்வரமாக இருந்தோம் நாம் ,
ஸ்வரமற்ற இசையாக இன்று நான்.
மனதில் உன் ஸ்வரங்களோடு
காத்து கொண்டு இருக்கிறேன் ,
விலகி சென்ற நீ விரும்பி
மீண்டும் வருவாய் என !!

மேலும்

balaji9686 - balaji9686 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-May-2015 12:50 pm

அவன் முதல் பார்வையில் பயத்தில் உறைந்தன
என் விழிகள்,
அவன் மறு பார்வையில் அதிசயம் என கரைந்தன
என் விழிகள்,
அன்று அவனது சட சட சத்தத்தில் சட்டென்று விழித்தன
என் விழிகள்,
இன்று அவனது சட சட சத்தத்தில் சங்கீதம் என அயர்த்தன
என் விழிகள்,
என் வீட்டின் முன் ஒரு வழி பாதையை இருவழி தடமாக காட்டினான் அவன்,
ஒற்றை அடியாய் அவ்வழி பாதையில் அவனை பின் தொடர்கிறேன் நான்,
வானவில் வண்ணங்கள் எழு ,
அவ்வண்ணத்தில் இவன் அறிந்த வண்ணமோ இரண்டு ,
பச்சை வண்ணம் கண்டால் பாம்பை போல நகர்கிறான்,
சிவப்பு வண்ணம் கண்டால் சீற்றமற்ற காளையாக நிற்கிறான்
நேரம் தவறுவது இவனது வாடிக்கை,
பாதையில் குறுகிட்டால் தகர்ப்பது வ

மேலும்

நன்றி தோழரே 10-May-2015 3:57 pm
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-May-2015 12:00 am
balaji9686 - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2015 1:50 pm

நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...

பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...

எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...

எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...

குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...

தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...

மேலும்

முன்பே இந்த கவிதையை படித்து ரசித்துள்ளேன்.அருமையாக உள்ளது. 16-Apr-2015 10:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 31-Mar-2015 12:36 pm
மனை+(வி)=மனைவி வாழ்த்துக்கள் ...நண்பா..கவிதை அருமை. 30-Mar-2015 8:41 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... கண்டிப்பாக உங்களால் முடியும்... எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் 23-Mar-2015 11:16 am
balaji9686 - யோகேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2015 12:15 am

என் காதலியே ....!

உன் இதழ் வென்ற மௌனத்தை,

ஒவ்வொரு முறையும் தோற்க்கிறது.....

என்னிடம்,

"உன் இமைகள்".....!!!

மேலும்

நன்று 20-Feb-2015 12:15 pm
நன்று .. 20-Feb-2015 12:09 pm
balaji9686 - balaji9686 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2015 6:19 pm

அழகின் பேரழகு இவளே என வியந்தேன் அவளை வனத்தில்
கண்ட போது !
சிலிர்ப்பின் சுகம் இதுவே என சிலிர்தேன் அவள் தென்றலாய்
தீண்டிய போது ,
சீற்றத்தின் கோரம் இதுவே என அறிந்தேன் அவள் அலைகளாக
சீறிய போது ,
தாகத்தின் தவிப்பு அறவே என மறந்தேன் அவள் மழையாக
பொழிந்த போது ,
மோகத்தின் வெட்கம் அதுவே என புன்னகைதேன் அவள் மேகங்கள்
மோதிய போது ,
வெப்பத்தின் தாக்கம் சுகமே என நின்றேன் அவள் கதிர்கள்
தாக்கிய போது,
ஒளியின் வெளிச்சம் அழகே என நினைத்தேன் அவள் வெண்ணிலவாய்
ஒளி வீசிய போது ,
கவிதையின் அர்த்தம் இவளே என்று அவளை எழுதுகிறேன்
இங்கு ,
அவள்தான் நம் மூச்சோடு மூச்சு கலந்து உயிர் மூச

மேலும்

நன்றி நன்றி 12-Feb-2015 10:15 pm
நன்றி 12-Feb-2015 10:15 pm
நன்று தோழரே... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 09-Feb-2015 1:17 am
இயற்கை ரசனை சூப்பர்.... வாழ்த்துக்கள்... 09-Feb-2015 12:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
Anbumani Selvam

Anbumani Selvam

கள்ளக்குறிச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (12)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

மேலே