ஆதலால் காதல் செய்வீர்- மண் பயனுற வேண்டும் கவிதை போட்டி

அழகின் பேரழகு இவளே என வியந்தேன் அவளை வனத்தில்
கண்ட போது !
சிலிர்ப்பின் சுகம் இதுவே என சிலிர்தேன் அவள் தென்றலாய்
தீண்டிய போது ,
சீற்றத்தின் கோரம் இதுவே என அறிந்தேன் அவள் அலைகளாக
சீறிய போது ,
தாகத்தின் தவிப்பு அறவே என மறந்தேன் அவள் மழையாக
பொழிந்த போது ,
மோகத்தின் வெட்கம் அதுவே என புன்னகைதேன் அவள் மேகங்கள்
மோதிய போது ,
வெப்பத்தின் தாக்கம் சுகமே என நின்றேன் அவள் கதிர்கள்
தாக்கிய போது,
ஒளியின் வெளிச்சம் அழகே என நினைத்தேன் அவள் வெண்ணிலவாய்
ஒளி வீசிய போது ,
கவிதையின் அர்த்தம் இவளே என்று அவளை எழுதுகிறேன்
இங்கு ,
அவள்தான் நம் மூச்சோடு மூச்சு கலந்து உயிர் மூச்சான
இந்த இயற்கை ,
ஆதலால் காதல் செய்வீர் இந்த இயற்கையை

எழுதியவர் : பாலாஜி (8-Feb-15, 6:19 pm)
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே