ஆக்னல் பிரடரிக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஆக்னல் பிரடரிக் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 20-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 194 |
புள்ளி | : 15 |
கொட்டும் பனித்துளிகள் கொஞ்சம்
கொஞ்சமாய் இருளைக் கரைக்க முயல ,
மஞ்சள் வானில் மெல்லச் சூரியனைப் பெற்றெடுக்கும் மேகங்கள் !
சற்று முன் பிறந்த மழலைச் சூரியன் ,தாய் மடியில் மெல்லக்
கண்திறந்து,
ஆழிதனில் முகம் பார்த்து,
ஆனந்தமாய்த் தன் கரங்கள் நீட்டி கடல்தனை அள்ளத் துடிக்கும் !
கதிர்க் கரங்கள் ஆழியைத் தழுவ ,
உல்லாசமாய் அலைவீசி மழலையைக் கொஞ்சும் நீலக்கடல் !
பறவைகள் ஒன்றாய் கீதம் இசைக்க ,
மலர்கள் பல வாசம் தெளிக்க ,
இன்பமாய் விடியும் "இனிய விடியல்" .... !
இதழ்கள் விரிக்கும் சிவப்புக் கம்பளம் ,
கவலை கரைக்கும் மாய மந்திரம் !
புன்னகை ,
இதழ்கள் பாடும் ஒரு வரிக்கவிதை !
திரவியம் தேடும் மனிதன் காலப்போக்கில் தொலைத்துவிட்ட ஈடிலா பொக்கிஷம் !
எல்லாம் டிஜிட்டல் மயமான பின் , புன்னகை மட்டும் மிச்சமேன்,
இதோ டிஜிட்டல் வடிவில் புன்னகைக்க தொடங்கிவிட்டான் smiley -ஆக !
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,
ரசனை மறந்து , இருக்கக் கட்டிய இதழ்களோடு
எந்திரம் போல் அலைய பழகிவிட்டோம் ,!
சிந்திக்க மறுக்கும் மனம் ,சிரிக்க மறுக்கும் குணம் ,
மலர மறுக்கும் இதழ்களால் ,
மருந்தாகிப் போன புன்னகை ,, !
இதழ்கள் விரிக்கும் சிவப்புக் கம்பளம் ,
கவலை கரைக்கும் மாய மந்திரம் !
புன்னகை ,
இதழ்கள் பாடும் ஒரு வரிக்கவிதை !
திரவியம் தேடும் மனிதன் காலப்போக்கில் தொலைத்துவிட்ட ஈடிலா பொக்கிஷம் !
எல்லாம் டிஜிட்டல் மயமான பின் , புன்னகை மட்டும் மிச்சமேன்,
இதோ டிஜிட்டல் வடிவில் புன்னகைக்க தொடங்கிவிட்டான் smiley -ஆக !
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,
ரசனை மறந்து , இருக்கக் கட்டிய இதழ்களோடு
எந்திரம் போல் அலைய பழகிவிட்டோம் ,!
சிந்திக்க மறுக்கும் மனம் ,சிரிக்க மறுக்கும் குணம் ,
மலர மறுக்கும் இதழ்களால் ,
மருந்தாகிப் போன புன்னகை ,, !
கல்வி அதன் தேவை அறிந்த
மேன்மக்கள் பயன் அறியா - புழுவாம்
இன்ன வேண்டுமென கூற யியலா
அறிவு தேடுவதோ ஆங்கிலத்தை !
யாது மாகி இருப்பவன் அறிந்த
ஆங்கில மற்று வேறொன்றும் - அறியா
பேதை யிவன் இம்மோகம் விடுத்து
அறிய வேண்டும் தாய்மொழி !
தை மாசம் வந்துருச்சு
தை பொங்கலும் தான் வந்துருச்சு!
இந்த கரிசக்காட்டு உழவன் வாழ்கையில
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பாக்கவில்ல!
கந்து வட்டிக் கடன் வாங்கி
நிலத்தைத் தான் உழுது வச்சான்!
சந்தையில விதை நெல் வாங்கி
உழுத நிலத்துல விதைச்சு வச்சான்!
இராப்பகலா வியர்வை சிந்தி
நாலு மூட்டை விளையவச்சான்!
அவன் உயிரா விளஞ்சதுக்கு
எவனோ பெரு வணிகன் விலையவச்சான்!
ஊருக்கே படி அளந்தான்
விளஞ்சதையெல்லாம் அளந்தான்!
ஆனா மூனுல இரு வேள உணவாக
இவனுக்கு ஈரத்துணி ஒரு முழம் தான்!
தை மாசம் வந்துருச்சு
தை பொங்கலும் தான் வந்துருச்சு!
இந்த கரிசக்காட்டு உழவன் வாழ்கையில
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பா
மழலையின் வாட்டம்
மனதை வாட்டுகிறது !
பிஞ்சு விழிகளில் வழிகிறது
பசிக் கொடுமையின் வருத்தம் !
வரிசையில் நிற்கிறது
வாரிசும் படைத்தவரும் !
உயிராய் பிறந்தவர் உலகினில்
உணவும் வேண்டாமா உய்த்திட !
கொடுமையிலும் கொடுமை
வறுமையில் வாழ்வது அன்றோ !
உண்டிட வழியில்லை எனில்
உயிராய் பிறந்தும் பயன் என்ன !
மனிதரில் ஏன்தான் பிரிவினை
ஏழை பணக்காரன் எனும் இருகூறு !
பிறந்திடும் முறையும் ஒன்றுதானே
பிறந்தபின் ஏன்தான் இந்த வேறுபாடு !
பசிப்பிணியைப் போக்கிட
மருந்தொன்றும் இல்லையே !
படித்தவர் கோடிகள் ஆனாலும்
மருத்துவர் ஒருவரும் இல்லையே !
வேண்டுகிறேன் உங்களிடம்
உதவிடுங்கள் முடிந்தவரை !
. .வலிகளைச் சுமந்து சுமந்து கல்லாகிப் போன என் இதயம். !
மரத்துப்போன என் மனம் ! முள்ளாகிப்போன என் பார்வை !
எப்பொழுதும் சூடாக விழும் என் வார்த்தைகள் !
மறந்தும் எனை மதிக்காத என் மதி !
இவையனைத்தும் சட்டென மாறிப்போனது !
காரணம் புரியாமல் தேடிக்கொண்டிருந்தேன் ! கிடைத்துவிட்டது ..காரணம் “நீ” !
கல்லாகிப்போன என் இதயத்தின் மீது சலசலவென நதியாகி நீயோட
கல்லும் கரைந்து இலகிப்போனது , மரத்த என் மனமும் மலர்ந்துபோனது !
முள்ளாகிப்போன என் பார்வையின் மீது பூவாகவே நீயும் பூத்துவிட ,எனை மதிக்காத என் மதியும் நொடிப்பொழுதில் எனை உபசரித்தது, என் புன்னகை கேட்டு நச்சரித்தது !
எப்பொழுதும் சூடாக விழும் என் வார்த்தைகள