மாற்றம்

. .வலிகளைச் சுமந்து சுமந்து கல்லாகிப் போன என் இதயம். !
மரத்துப்போன என் மனம் ! முள்ளாகிப்போன என் பார்வை !
எப்பொழுதும் சூடாக விழும் என் வார்த்தைகள் !
மறந்தும் எனை மதிக்காத என் மதி !
இவையனைத்தும் சட்டென மாறிப்போனது !
காரணம் புரியாமல் தேடிக்கொண்டிருந்தேன் ! கிடைத்துவிட்டது ..காரணம் “நீ” !
கல்லாகிப்போன என் இதயத்தின் மீது சலசலவென நதியாகி நீயோட
கல்லும் கரைந்து இலகிப்போனது , மரத்த என் மனமும் மலர்ந்துபோனது !
முள்ளாகிப்போன என் பார்வையின் மீது பூவாகவே நீயும் பூத்துவிட ,எனை மதிக்காத என் மதியும் நொடிப்பொழுதில் எனை உபசரித்தது, என் புன்னகை கேட்டு நச்சரித்தது !
எப்பொழுதும் சூடாக விழும் என் வார்த்தைகள்,உன் முகம் பார்த்து யாரிடமும் சொல்லாமல் தென்றலாகிப்போனது !
மாற்றங்களைக் கண்டு
மகிழ்ந்து போகிறேன்,கட்டுபாடுகளுடன் ! ஏனெனில்
மாற்றங்கள் நிரந்தரமில்லை உனைக் காணாத நாட்களில். !! :( :)

எழுதியவர் : ஆக்னல் பிரடரிக் ப (26-Nov-13, 12:22 am)
சேர்த்தது : ஆக்னல் பிரடரிக்
Tanglish : maatram
பார்வை : 111

மேலே