புன்னகை எந்திரம்

இதழ்கள் விரிக்கும் சிவப்புக் கம்பளம் ,
கவலை கரைக்கும் மாய மந்திரம் !
புன்னகை ,
இதழ்கள் பாடும் ஒரு வரிக்கவிதை !
திரவியம் தேடும் மனிதன் காலப்போக்கில் தொலைத்துவிட்ட ஈடிலா பொக்கிஷம் !
எல்லாம் டிஜிட்டல் மயமான பின் , புன்னகை மட்டும் மிச்சமேன்,
இதோ டிஜிட்டல் வடிவில் புன்னகைக்க தொடங்கிவிட்டான் smiley -ஆக !
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,
ரசனை மறந்து , இருக்கக் கட்டிய இதழ்களோடு
எந்திரம் போல் அலைய பழகிவிட்டோம் ,!
சிந்திக்க மறுக்கும் மனம் ,சிரிக்க மறுக்கும் குணம் ,
மலர மறுக்கும் இதழ்களால் ,
மருந்தாகிப் போன புன்னகை ,, !

எழுதியவர் : ...............ஆக்னல் ப .................... (18-Mar-15, 1:21 am)
Tanglish : punnakai endhiram
பார்வை : 116

மேலே