உழவன்

தை மாசம் வந்துருச்சு
தை பொங்கலும் தான் வந்துருச்சு!
இந்த கரிசக்காட்டு உழவன் வாழ்கையில
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பாக்கவில்ல!

கந்து வட்டிக் கடன் வாங்கி
நிலத்தைத் தான் உழுது வச்சான்!
சந்தையில விதை நெல் வாங்கி
உழுத நிலத்துல விதைச்சு வச்சான்!

இராப்பகலா வியர்வை சிந்தி
நாலு மூட்டை விளையவச்சான்!
அவன் உயிரா விளஞ்சதுக்கு
எவனோ பெரு வணிகன் விலையவச்சான்!

ஊருக்கே படி அளந்தான்
விளஞ்சதையெல்லாம் அளந்தான்!
ஆனா மூனுல இரு வேள உணவாக
இவனுக்கு ஈரத்துணி ஒரு முழம் தான்!

தை மாசம் வந்துருச்சு
தை பொங்கலும் தான் வந்துருச்சு!
இந்த கரிசக்காட்டு உழவன் வாழ்கையில
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பாக்கவில்ல!
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பாக்கவில்ல!!!

எழுதியவர் : (14-Jan-14, 12:02 pm)
Tanglish : uzhavan
பார்வை : 286

மேலே