என் காதலன் அவன்
அவன் முதல் பார்வையில் பயத்தில் உறைந்தன
என் விழிகள்,
அவன் மறு பார்வையில் அதிசயம் என கரைந்தன
என் விழிகள்,
அன்று அவனது சட சட சத்தத்தில் சட்டென்று விழித்தன
என் விழிகள்,
இன்று அவனது சட சட சத்தத்தில் சங்கீதம் என அயர்த்தன
என் விழிகள்,
என் வீட்டின் முன் ஒரு வழி பாதையை இருவழி தடமாக காட்டினான் அவன்,
ஒற்றை அடியாய் அவ்வழி பாதையில் அவனை பின் தொடர்கிறேன் நான்,
வானவில் வண்ணங்கள் எழு ,
அவ்வண்ணத்தில் இவன் அறிந்த வண்ணமோ இரண்டு ,
பச்சை வண்ணம் கண்டால் பாம்பை போல நகர்கிறான்,
சிவப்பு வண்ணம் கண்டால் சீற்றமற்ற காளையாக நிற்கிறான்
நேரம் தவறுவது இவனது வாடிக்கை,
பாதையில் குறுகிட்டால் தகர்ப்பது வேடிக்கை,
குறுக்கே வரா என் இதயத்தை தகர்த்த இவன் தான்
என் காதலன்
-- ரயில் தண்டவாளத்தின் அருகில் வசிக்கும் பெண்