நாளை அன்னையர் நாள்
அம்மா என்றோர் தெய்வம் _அவள் தினம் தரும் சுகங்கள் ஆயிரம்
அன்னையின் மடியே ஆலயம் _அதில்
நாமெல்லாம் என்றும் சரிசமம் !!!!!
அம்மா ...அம்மா
உரு கொடுத்து உயர் உயிர்அளித்து உணவளித்து நல் உணர்வளித்து
உயிராய் மாற்றினாள் _நம்மை
உயர்வாய் ஏற்றினாள்..
அம்மா.....அம்மா ...அம்மா..
வேருக்கு வியர்த்த வியர்வையை
விழுதுகள் துடைக்கும் நாளிது
நிலாவின் விலா வலி போக்க
விண்மீன்கள் தடவி விடும் நாளிது
அம்மா.... அம்மா...அம்மா.. ....
வேதனைகளைத் தான் பெற்று_பல
சோதனைகளை தன் தோளில் ஏற்று
சாதனைகள் நாம் புரிய நமக்கான
தேவதை அவள். தொழுவோம் நாமே
அம்மா....அம்மா....அம்மா
(நாளை அன்னையர் நாள்_தளத்தின் அனைத்து அன்னையர்களுக்கும் ,அனைத்து தோழர்களின் அன்னையர்களுக்கும் சமர்ப்பணம் )