மகளிர் தினத்துக்காக

...........................................................................................................................................................................................

வானம் அளந்தது
வாமனன் மட்டுமல்ல
கல்பனா சாவ்லாவும்..
..........................................................................................................

முதியோர் இல்லத்தில்
பேரனிடம் வேண்டினாள் பாட்டி:
“ அப்பா அம்மாவை நல்லா கவனிச்சுக்கோ..”
.................................................................................................................

கணவர் வராமல் சாப்பிட மாட்டார்
இக்காலத்திலும் மனைவி..
“ அட, அவர் வந்துதானே சமைக்கணும்.. ”
....................................................................................................................

மறு ஒளிபரப்பாகிறது
மனைவியின் குழந்தைப் பருவம்..
மடியில் மகள்..!
...................................................................................................................

பாராட்ட ஆளில்லாதபோது
தலை கோதிச் செல்கிறது..
தாயின் சேலை கொடுத்த காற்று..
.................................................................................................................
கணவரில்லாத இரவில்
தன் வயதொத்த கணவரின் சகோதரர்களுக்கு
தாயாகி விடுவாள் இந்தியப் பெண்..!
..................................................................................................................

எழுதியவர் : அருணை ஜெயசீலி (8-Mar-16, 9:13 pm)
பார்வை : 142

மேலே