பழமொழி - 1
நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பன் ஆவான்.
· கழைக்கூத்து ஆடிய பின் காசுக்கு கீழே தான் இறங்க வேண்டும்.
· குப்பையிலே கிடந்தாலும் குந்துமணி மங்காது.
· கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது.
· உலோபி (கஞ்சன்) என்றுமே ஏழை.
· விளையும் போதே சோறாய் இருந்தால் விறகும், வரட்டியும் தேவை இல்லை.
· தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.
· பொக்கை வாயன் மெச்சினானாம் பொரி மாவை.
· கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
· இடம் வலம் தெரியாதவனுடன் இணக்கம் பண்ணக்கூடாது.
· திண்ணைக்கு விடிந்தால் வீட்டுக்கும் விடியும்.
· ஆசிர்வாதமும், சாபமும் அறவோர்க்கு இல்லை.
தொகுப்பு: என்.கணேசன்