வாழும் உம் புகழ் பாடும் நிலாவே

தாலாட்டு பாட தரணிக்கு வந்தவர்!
தாளத்தோடு தரை தொடுமெல்லாம்,
பாடும் குரலால் நனைத்தவர்,
வீசும் காற்றையும் காந்த குரலால் எழிலூட்டியவர்!
மனமெல்லாம் மகுடம் சூடிய வண்ண குரலே!
என் வார்த்தைகளும் அழுகிறது இன்று.
மனமெல்லாம் மகுடம் சூடிய வண்ண குரலே!
என் வார்த்தைகளும் அழுகிறது இன்று.
பல மொழி வார்த்தைகள் எல்லாம்,
உன் குரலால் அழகானது.
மீண்டெழ முடியாத இடத்தில் இருந்தாலும்,
மீண்டெழ முடியாத இடத்தில் இருந்தாலும்,
உங்கள் குரல் நாங்கள் உடையும் நேரத்தில் மீட்கும்.
ஆனால், உம்மை மீட்க நாங்கள் எங்கு செல்வோம்?
கலியுகம் விட்டு விண்ணுலகம் போனவரே!
அங்கும் உம்மை வரவேற்க உம் குரலே ஒலிக்கும்.
கலியுகம் விட்டு விண்ணுலகம் போனவரே!
அங்கும் உம்மை வரவேற்க உம் குரலே ஒலிக்கும்.
இறைவா ! சொர்க வாசலை திறந்து வை !
அவரின் குரலை இனி நீ மட்டுமே கேட்க .
மனமுடைந்த கண்ணீர் மட்டுமே !
வார்த்தை தடுமாறுகிறது தடம் மாறி போனதால் .
வாழ்க வாழும் உன் புகழ் பாடும் நிலாவே!