யாவையும் வெல்ல
கோபம் வீரமல்ல..
பொறுமை காத்தால்
நேசம் நேரும்மெல்ல...
சூழ்ச்சி நல்ல வியூகமல்ல..
அனுபவத்தால் முடிவெடுத்தால்
விழைவது தீமையல்ல...
தோல்வி முடிவல்ல..
முயற்சி தொடர்ந்தால்
வெற்றி தொலைவல்ல...
கண்ணீர் நிரந்தரமல்ல..
மெல்லிய மனம் உறுதிகொண்டால்
பொங்கும் மகிழ்ச்சியென்பது பொய்யல்ல...