தினேஷ் காளிமுத்து - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தினேஷ் காளிமுத்து
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  26-Jul-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Nov-2011
பார்த்தவர்கள்:  772
புள்ளி:  32

என்னைப் பற்றி...

நல்ல ரசிகன்னு சொல்லலாம்...

என் படைப்புகள்
தினேஷ் காளிமுத்து செய்திகள்
தினேஷ் காளிமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2022 7:09 pm

குறையும் வாழ்நாளில்
பெருகும் இடைவெளியில்
மடிந்தது மகிழ்ச்சியா
இல்லை வருத்தமா
என்பதில் விளங்கும் - நம்
உறவின் வலிமை...

மேலும்

தினேஷ் காளிமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2022 1:16 am

அசைவில்லா ஆளில்லா காடோன்று ஓவியத்தில் உறைந்தது,இடியில்லா ஈரமில்லா மழையோன்று புகைப்படத்தில் புதைந்தது, மனமில்லா பொலிவில்லா பூவொன்று சிற்பத்தில் சிதைந்தது,நோயில்லா நொடியில்லா உயிரோன்றுமரணத்தில் உணர்ந்தது ஈடுயில்லா இணையில்லா இயற்கையேன்று!

மேலும்

தினேஷ் காளிமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2022 10:00 pm

நம் கற்பனைகளை உண்மையேன நினைத்து துன்புறுவது/இன்புறுவது
மாயதோற்றம்(hallucination).

எடுத்துக்காட்டாக...
* "மின்னல் ஒரு கோடி
எந்தன் உயிர் தேடி
வந்ததே"
இது அழகிய கற்பனை என்பது தெளிவாக நாம் அறிந்ததே.
இருப்பினும் இது போன்ற கற்பனைகளை உண்மை என்று நம்பி சிலர் நடுங்கி துன்புறுவது மாயத்தோற்றம்.

**"லச்சம் பல லச்சம்
பூக்கள் ஒன்றாக பூத்ததே"
இந்த கற்பனையையும் உண்மை என்று சிரித்து மகிழ்ந்து மனதில் கொண்டாடி இன்புறுவதும் மாயத்தோற்றமே!

இப்படி காதல் முதல் கடவுள் தேடல் வரை நாம் உணர்வதில்
எது மெய் எது பொய்
என்றரிந்து அனுகுவது நன்று....

--தினேஷ் காளிமுத்து

* ** கவிபேரரசு வைரமுத்து அவர்க

மேலும்

தினேஷ் காளிமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2022 6:59 am

பயம் நிமித்தமாக 
எழும் மரியாதை 
போலியானது.

மரியாதை நிமித்தமாக 
தோன்றும் பயம் 
உண்மையானது

பயம் 
குற்றத்தை குறைக்கும் 
குற்றம் 
மரியாதையை குறைக்கும் 

பயத்தை வைத்து
கைப்பற்றும் அதிகாரத்தை
விட மரியாதை தேடி
தரும் அதிகாரம் மேலானது
நிம்மதியானதும் கூட....

மேலும்

தினேஷ் காளிமுத்து - S UMADEVI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2020 3:46 pm

மகாத்மாவே!
நீ
தீவீரவாதமெனும்
தீராதவாதமுற்ற
வெள்ளையனுக்கு
அகிம்சை எனும்
கோடாரித் தைலமிட்டாய்!

மார்பில் பதிந்த
கால் தடத்தை
அளந்திட்ட உன் கண்கள்
செய்தனவே
காலனி கொணர்ந்தவனுக்கும்
காலணியை!

உன் அரையாடை கொண்டு
முழு ஆடை சூட நினைத்தாயே
இந்தியாவின் ஏழ்மைக்கு!

மூச்சீற்றதை எட்டும் வரை
நூலிழைத்ததே
உன் இராட்டையின் கைகள்
வறுமையின் கிழிசல்களை
தைப்பதற்காய்!

எளிமை எனும் ஏணியிட்டே
ஏறி விட்டாய்
சுய ராச்சியத்தின் சிம்மாசனத்தில்!

இன்றோ
ரூபாய் நோட்டுக்களில்
பெரும் பணக்காரனாய்
உன் குடியிருப்பு!
ஆனால்
அதன் கையிருப்பு
இருக்கும் நாட்களில் மட்டுமே
உன் பொக்கை வாயால்
வரவழைக்க முடிகிறது
எங்களுக்குச் சிரிப்பு!

சு.உமாதே

மேலும்

Nandri sakothararae 20-Aug-2020 8:00 pm
அருமை! "உன் அரையாடை கொண்டு முழு ஆடை சூட நினைத்தாயே இந்தியாவின் ஏழ்மைக்கு!" தனித்து கூட நின்றாலும் வியக்க வைக்கும் இவ்வரிகள் மிகவும் சிறப்பு! மேலும் தொடர என் வாழ்த்துக்கள் .. 20-Aug-2020 5:28 pm
தினேஷ் காளிமுத்து - தினேஷ் காளிமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2020 8:54 am

பிறர் மகிழ 
உடல்சிதறி உயிர்விட 
பிறந்த பட்டாசே! 

திரிக்கிள்ளி கொழுத்தியும் 
அமைதியாய் உன்னில் 
அனைந்து போனதேனோ?

மழைத்துளி ரகசியமாய் 
மண்ணை விடுத்து 
உன்னை முத்தமிட்டதோ?

வாடிக்கை வாழ்க்கையை  
உடைத்தெறிய நீ
காட்டும்  வேடிக்கையோ?

தீ வைத்தோர் 
திரும்ப வந்ததும் 
திடுக்கிடவைக்க திட்டமோ?

சிதறுண்ட  உற்றார்க்கு 
செலுத்தும் இறுதி    
மௌன அஞ்சலியோ?

நொடிகள் சில கடந்த நிலையில் 
இறந்த இதயம் இதயமூச்சூட்டலால்(CPR ) புத்துயிர்
பெறுவது போல  வெடியின் தீ 
உயிர் பெற்றதால் வெடித்தது வெடி!

மேலும்

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா! 14-Aug-2020 1:58 pm
திருத்தம்... மத்தாப்போ என்று வாசிக்கவும் . 13-Aug-2020 11:55 am
பட்டாசு : கவிதை பட்டாசோ ?...இல்லை எண்ண மத்தப்போ? .. மின்னுகிறது.. இல்லை வெடிக்கிறது போங்கள், கவிஞரே ! 13-Aug-2020 11:54 am
தினேஷ் காளிமுத்து - தினேஷ் காளிமுத்து அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2019 4:41 pm

வருடா வருடம் பிரியாவிடைபெரும் வருடமேமனதில் உதிக்கும் கனவுகள் யாவும்உலகில் நல்செயலால் உயிர்ப்பெறும்சொல்லி சொல்லி பூத்திருவாய் புத்தாண்டாய்!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே