பயமும் மரியாதையும்

பயம் நிமித்தமாக 
எழும் மரியாதை 
போலியானது.

மரியாதை நிமித்தமாக 
தோன்றும் பயம் 
உண்மையானது

பயம் 
குற்றத்தை குறைக்கும் 
குற்றம் 
மரியாதையை குறைக்கும் 

பயத்தை வைத்து
கைப்பற்றும் அதிகாரத்தை
விட மரியாதை தேடி
தரும் அதிகாரம் மேலானது
நிம்மதியானதும் கூட....

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (4-Feb-22, 6:59 am)
பார்வை : 46

மேலே