தமிழ் புதுநாள் வாழ்த்துக்கள்
தமிழ் என்றால் முறுக்கேற
தாயை வணங்கி
தந்தையை மதித்து
தாரத்தை தட்டிக்கொடுத்து
தமையனுக்கு தோல் கொடுத்து
தன் அக்காள் மகள்களை சீண்டி
தங்கை மகனுக்கு எண்ணெய் பூசி
தான் மட்டும் என்ற உணர்வை மறந்து
தாழ்ந்தோர் யாருமில்லை - சமம் என்ற சொல்லே
தரணி எங்கும் ஓங்கி
தமிழ்போல் தமிழே முழக்கமிட
தமிழ் திருநாளை கொண்டாடுவோம்
தம்மை காக்கும் விவசாயியை மதித்து.