நிறைந்திருப்பவள் நீயே சகி

பூவுலகம் தூங்கும் பௌர்ணமி நேரம்.,
முத்தான வெண்ணிலா புறா ஒன்று.,
நீல வானிலே சிறகடித்தது.,
அதை முழு பௌர்ணமி நதி ஒன்று,!
காதலிப்பதாய் மனதை விரித்தது.,

சலனமான நதியின் நட்ட நாடு இதயத்தில்
வெண்ணிலா புறா சிறகடித்து நிற்கிறது.
முழு நிலவும் தன் பொழிவை இறைத்தது

இரு மௌன இயற்கை அழகுகள்
காதலித்த தருணம் , மௌனித்த தருணம்
சிங்கார மீன் துள்ளி பாய்ந்து நீரை கலைத்தது
புறாவும் புன்னகையுடன் புறப்பட்ட நேரம்

நதி தன் வட்ட வட்ட அலைகளை எழுப்பி
படம் பிடித்து தன் காதலை சொன்னது
என் உயிரிலும் உடலிலும் நிறைந்திருப்பவள் நீதான்..
எழில் இறகே..!! இணைந்திடு என்னுள்..

எழுதியவர் : சக்திவேல் (26-Jan-16, 11:41 am)
பார்வை : 99

மேலே