குழந்தையின் அகராதி - தாய்,

என் இருள் சொர்க்கத்தில்
மீண்டும் மீண்டும் தூங்க ஆசை
ஏனென்றால் - இதயங்களே..!!
எனக்காக தாய் கட்டிய முதல் கோவில் - 'கருவறை'
எனக்காக தாய் மீட்டிய முதல் இசை - 'அவளின் இதயத்துடிப்பு'
எனக்காக அவள் செய்த குளிர் வெப்ப மழை - 'அவள் குடித்த நீர்'
நான் நுகர்ந்த முதல் மலர் வாசனை - 'அவள் சுவாசம்'
சுத்தம் கொண்டு யுத்தம் செய்து காத்த - 'பெண் ஹிட்லர்'
என் மேல் பூக்களை இறைத்த இளவரசி - 'அவள் புன்னகை'
குளிரிலும் சூரியனை கருவறைக்குள் உருவாக்கிய - 'போர்வைக்குள் அவள்'
என்னென்று சொல்ல - இதயங்களே..!!
மண்ணில் என் கால் பதியும் வரை
கடவுளிடம் கதறும் காட்சிக்கு
கல்லும் உயிர் பெற்று கை கூப்பும்
மாதவனும் (கிருஷ்னர்) மண்டியிடும் அவள் முன் சேயாகி
கருவறைக்கே தெய்வம் என்பதா...?
கருணைக்கே தெய்வம் என்பதா...?
இவள் காலம் போற்றும் குழந்தையின் அகராதி என்போம்..!!!

எழுதியவர் : சக்தி (15-Jul-15, 4:45 pm)
பார்வை : 171

மேலே