அன்னையின் தோள் சாய்ந்த துயில்

தங்க தொட்டிலில் கூட கிடைக்காத
இன்பமான துயில்
அன்னையின் வியர்வை படிந்த
தோள்களில் மீது சாயும் போது கிடைக்கிறது!
வேறொரு தொட்டிலும் தருவதில்லை தாயே
உன் சீலை முகப்பில் சாயும் போது
நான் பெரும் இன்பத்தின் எல்லையை!

எழுதியவர் : Narmatha (16-Jul-15, 12:51 pm)
சேர்த்தது : Narmatha
பார்வை : 245

மேலே