என் அன்னை

என்றுமே என் முதல் கடவுள் தாங்கள் என்பதால்
இத்தளத்தில் நான் எழுதும் முதல் கவிதை உனக்கானது - அம்மா
எனக்கு தெரியும் நான் எத்தனை கவிதைகள் வரைந்தாலும்
அவையாவும் உனக்கு மிகையாகாது ………
பத்து மாதம் சுமந்து பசி தூக்கம் - மறந்து
என்னக்கு இந்த உலகினை - பரிசளித்தாய் ……
நான் கண் திறக்கும் போதே வாடா என் -கண்ணே
என என்னை உன் கண்ணீர் எனும் பன்னீர் தூவி வரவேற்றாய் ……..
அந்த நிமிடம் நான் அழுததற்கு - காரணம்
இறைவன் அனைவருக்கும் காட்சி அளிப்பது இல்லையாம் –ஆனால்
எனக்கு மட்டும் வரப்ப்ரசதமாக -உன்னை
அளித்துள்ளான் என்ற ஆனந்தத்தில்……..
தவம் இருந்து என்னை பெற்றெடுத்ததால் - உன்
வாழ்வின் ஒளி தீபா என்று அழைத்தாய் ...
எனக்காக ஒரு ஆனந்த அன்பு -மாளிகையை
உன் சேலையில் கட்டி கொடுத்தாய்...
எட்டா தொலைவில் இருக்கும் –வெண்ணிலவை
எட்டி பிடித்துதாறேன் என்று உணவளித்தாய் ...
தவழ்ந்து வரும் தங்க தேரே -என்று
மார்போடு அள்ளி அனைத்து கொண்டாய் ...
என் ஆசை அனைத்தையும்- நான்
அறியும் முன்னே எனக்கு அன்பளித்தாய் ..
அட ….!!!!
எத்தனை அதிசயம்- என்
அன்னை கூட பேசும் ஓவியம் ஆகின்றாள் ...
உலகில் அதிசயங்கள் எத்தனை வேண்டும் என்றாலும் - தோன்றலாம்
என் முதல் அதிசயம் நீதான் அம்மா ...
குழந்தை பருவம் முதல் குமரி பருவம் வரை -சற்றும்
மணம் கோணாமல் என்னை பார்த்ததால் -தான்
உனக்கும் உன் அன்னை புஷ்பம் என்று பெயர் வைத்தார் போலும் ...
எனக்கு தெரியும் நான் -உனக்கு
இன்னும் செல்ல பிள்ளை என்று ..
எனக்கு உங்களின் மகளாய் இருப்பதை விட
உங்களின் மறு தாயாக மாற ஆசை அம்மா ............

எழுதியவர் : மேகா ரூபன் (15-Jul-15, 3:54 pm)
Tanglish : en annai
பார்வை : 1107

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே