அம்மாவின் தியாகம்

* சாப்பாடு *

சுடச்சுட உணவு இருந்தால்
தாத்தா அதிகம் சாப்பிடுவார்

அம்மா உணவு பரிமாறினால்
அப்பா அதிகம் சாப்பிடுவார்

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்
தங்கை அதிகம் உண்ணுவாள்

தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான்

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள்!

எழுதியவர் : பிதொஸ் கான் (15-Jul-15, 11:51 am)
சேர்த்தது : பிதொஸ் கான்
Tanglish : ammaavin thiyaagam
பார்வை : 389

மேலே