' காதலும் காதலிக்கும் காதலே....!!!!! '

சின்ன பொண்ணு சொக்கிய பேச்சே,,
சிதறும் இதழ் பேச்சால்
சிந்தனை துளிரும் அலைகடல் மீறுதடி - ஆஹா..!
சிறுஉடல் விட்டு
சிதறும் சேலை வனப்பில்
சிறுவானவில்லும் ஒட்டிகொண்டதடி - இம்ம்ம்..!
சிலமுகம் சுழித்த
சின மொழி ஆசை முறைபால்
சித்தம் கலைந்ததடி - பூவே..!
சிலிர்க்க நனைத்து
சிறைப்பட்டு பிணைந்த நம் உதட்டால்
சிறு எச்சிலும் தத்தளிக்குதடி - முத்தே..!
சிறுவளையல் பரிசால்
சிறு மொட்டாய் வெடித்தால்
சிறுஜென்மமும் விழிக்கொண்டதடி - வாழ்வே..!
சிறுதுயரம் வழிவிட்டு
சிலையாகும் உன் மௌனத்தால்
சில யுகங்கள் தொலைந்தே போனதடி - மௌனமே..!
சிலு சிலு நம் காதலால்
சிறு புண்ணியமும் யாசிக்கட்டும்
சில்லென்ற காதலர்களின் பூர்வ ஜென்ம பயணத்திற்காக - காதலே..!
சிறு பூவே..! கவி மனவே..! இடை நடையே..!
சிறகாய் சிரித்து மார்புற சருகியே சாவோம்
சிறு உலகம் வழிவிடும் மரண காதலுக்காக - விதியே..!
சில்லறை விழியே சிறைபடுவோமடி
சிவந்த நம் காதல் கூட்டில்
சிகமுகம் காட்டும் கடவுளை அடைய - "இறைவா..!"