திருக்குறள் கிறித்துவ நூல் இல்லை - 3 4
3/4 -இயேசு கிறித்துவின் கோபமும் கடுஞ்செற்களும்
××× யாதுமறியான் . @@
அதற்கு அவர் ( இயேசு) கூறியது; "இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. ( மத்தேயு 12: 39)
கோபத்தின் சிகரத்திற்கே சென்ற இயேசு , எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் பார்த்தீர்களா? இதுபோன்ற வார்த்தைகள் ^ இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று ^ எனும் குறளுக்கு இலக்கணமாக விளங்குகிறது அல்லவா ?
மற்றொரு சமயம் இயேசு,
" பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்" என்றார்
( மாற்கு 8:38 )
எந்த யூத மக்களுக்காகத் தான் வந்ததாக இயேசு கிறித்து கூறினாரோ, அதே யூத மக்களைக் குறித்து அவர் கூறுவதைக் கேட்டீர்களா ? விபச்சார சந்ததியினர் என்பது எப்படிப்பட்ட வார்த்தை? அதன் பொருள் இயேசுவிற்குப் புரியாதா ?
தனது பிள்ளைகளாகிய இஸ்ரயேல் மக்களுக்கு, மீட்பளிக்க வந்ததாகக் கூறும் இயேசு கிறித்து , ஒருவருக்கு உளப்பூர்வமாக ஒன்றைக் கொடுப்பதை விட முகமலர்ச்சியோடு இனிய சொற்களைக் கூறுவதே சிறப்பு ! -
அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆகப் பெறின் ( குறள் 92 )
என் குறளுக்கு முற்றிலும் முரணாக அல்லவா நடந்து கொள்கிறார் ?
இயேசு , இவர்களிடம் மட்டும் தனது சினத்தைக் காட்ட வில்லை. தனது முதன்மை சீடராகியப் பேதுருவையும் சாடுகிறார். பாருங்கள் . நற்செய்தி விவரிக்கும் இந்த நிகழ்வை வாசியுங்கள் .
"மானிடமகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்" என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.
இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார்.
ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார். "
( மாற்கு 8:31 - 33) .
கோபம் வந்துவிட்டால் இயேசுவுக்கு அன்பிற்குரியவர்களும் சாத்தான்களே! .