நான் செய்த தவறுகள்

நான் செய்த தவறெல்லாம்
உன் சிரிப்பை ரசித்தது.....
நான் செய்த தவறெல்லாம்
உன் பார்வையில் விழுந்தது....
நான் செய்த தவறெல்லாம்
உன்னோடு மணி கணக்கில் பேசியது...
நான் செய்த தவறெல்லாம்
இதன் பெயர் காதல் என்று அறியாமல் போனது....
நான் செய்த தவறெல்லாம்
என்னை நான் மறந்தது....
இன்றும்
நான் செய்யும் தவறெல்லாம்
உன் நினைவுகளை எனக்குளே வைத்திருப்பது ....
ஒரு முட்டாளாக...


ரா. சூர்யா

எழுதியவர் : ரா. சூர்யா (18-Sep-14, 6:55 pm)
பார்வை : 139

மேலே