உன் பதில் வருமா
கண்ணே கோவமா
மௌனம் ஏனம்மா
காதல் சொல்லிட
ஏன் தாமதம் சொல்லமா
கடிதம் தருகிறேன்
கண்களால் பேசினாய்
கண்களின் வார்த்தைகள்
புரியாமல் விழிக்கிறேன்
கவிதை சொல்கிறேன்
புன்னகை செய்கிறாய்
என் புலம்பல் காரணம்
நீ என ஆகிறாய்
உன் பதில் கேட்கவே
நான் தினம் வாழ்கிறேன்
தாமதம் ஆவதால்
தினம் தினம் சாகிறேன்