காதலுக்கு பின் நட்பு

காதலுக்கு பின் தயங்கும் நட்பு...

நட்பால் காதலை தொடர்வது எளிது....
கடினம்...
உன் காதலை மறந்து அதை
நட்பாய் தொடர்வது....
காதலை மறந்து
நட்புடன் உன்னிடம் சிரிப்பதும்...
நட்புடன் கை குலுக்குவதும்....
நட்புடன் நான் உன்னருகில் அமர்வதும்...
நட்புடன் உன்னுடன் ஒரு மணி நேர அரட்டையும்...
தொலைபேசியின் மறுமுனையில்
நட்புடன் தலை ஆட்டுவதும்...
நட்புடன் நீ என் தோழியுடன்
பழகுவதை ஏற்று கொள்வதும்...
நட்புடன் உணவை உன்னுடன் பகிர்வதும்..
உன் பின்னால் வண்டியில் அமர்ந்து நட்புடன்
வலம் வருவதும்....
கடினம்....
உன் காதல் மறந்து இந்நட்பு
வளர்வது கடினம்......

இன்று அல்ல என்றும் நட்பின் ஈடு காதல் செய்ய முடியாது...

எழுதியவர் : ரா.சூர்யா (17-Jun-14, 9:57 pm)
பார்வை : 144

மேலே