எனை மாற்றிடுவாள் புன்னகையாலே-நாகூர் லெத்தீப்

கவிதைகளின்
பாரம் அவளே
கவிதைக்கு சாரம்......!

ஓவியமாக
தெரிவாள்
கனவுகளில்
தவழ்ந்திடுவாள்........!

கற்பனையில்
உதிப்பாள்
கவிதையிலே
மிதந்திடுவாள் ......!

சிரிப்பால்
மனதை
சிறகடித்து பறக்க
செய்திடுவாள்..........!

தேட வைப்பாள்
தவிக்கவும்
செய்திடுவாள்
அவளும் தவிப்பால்.........!

பாதைகள் எல்லாம்
சோதனைகள்
அவளாலே......!

இதமான
சுகம் தனை
மறந்து
எனை துறந்து.......!

தனிமை
இனிமை
சுகமான புதுமை
அவளாலே........!

பார்வையால்
யாழ் தொடுப்பாள்
அவளே நடிப்பால்........!

ஊமை மொழியால்
உள்ளத்தை
கவர்ந்திளுப்பாள்.........!

பேசிடுவாள்
எனை
மாற்றிடுவாள்
புன்னகையாலே........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (17-Jun-14, 9:42 pm)
பார்வை : 94

மேலே