தூது

முகநூல் , மின்னஞ்சல் ,குறுஞ்செய்தி
எனப்பல வழி உள்ளது
உன்னிடம் காதலை தெரிவிக்க ,
இருந்தும் ;
நிலவிடமும் ,காற்றிடமும் ,முகிலிடமும்
தூது அனுப்பிக் கொண்டிருக்கிறேன்
இக்காலத்திலும் ;

ஏனெனில்
நீ இல்லை என்று பதில் உரைத்தாலும்
மௌனமாய் இருந்து ,
அவை
என் காதல் சாகாமல்
நம்பிக்கையுடன் துளிர் விடச் செய்கிறது !!

எழுதியவர் : சக்தி வினோ (17-Jun-14, 9:21 pm)
Tanglish : thootu
பார்வை : 98

மேலே