sakthivino - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : sakthivino |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 26-Mar-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 31-Jul-2013 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 35 |
இமை மூடாத என்
இரவுகள் அறியும்
கண்ணீரின் ஈரம் மட்டுமே
காலைச்சூரியன் ஒளியில்
காய்கிறது என்று!!!
காதலால் மட்டுமே
நிலத்தில் ஓடி
நிலவை அடையலாமென்ற
நம்பிக்கை தர முடியும்!!
நிலவை இழுத்து
நிலத்தில் நிறுத்தி
அதை நிறைவேற்றவும் முடியும்!!!
காதலால் மட்டுமே
நிலத்தில் ஓடி
நிலவை அடையலாமென்ற
நம்பிக்கை தர முடியும்!!
நிலவை இழுத்து
நிலத்தில் நிறுத்தி
அதை நிறைவேற்றவும் முடியும்!!!
விரும்புகிறேன் என்று சொல்லவும் முடியாமல் ;
வெறுக்கிறேன் என்று விலக்கவும் முடியாமல்;
வாழவும் முடியாமல்,
சாகவும் முடியாமல் ;
என் வலி எவருக்கும் வேண்டாம்!!!
தோழனாய் நீ வந்திருக்கவும் வேண்டாம்!!
விரும்புகிறேன் என்று சொல்லவும் முடியாமல் ;
வெறுக்கிறேன் என்று விலக்கவும் முடியாமல்;
வாழவும் முடியாமல்,
சாகவும் முடியாமல் ;
என் வலி எவருக்கும் வேண்டாம்!!!
தோழனாய் நீ வந்திருக்கவும் வேண்டாம்!!
உணவூட்டி ,குளிப்பாட்டி
தலைவாரி ,தாலாட்டி
தூங்கிய பின் முத்தம் தந்து ,
என அம்மாவாய் அனைத்தையும்
செய்யும் என் மகள் ,
என்னை பாட்டி என்றும் ;
அவரை தாத்தா என்றும் ,
தன் பொம்மையிடம் சொல்லும்போது ,
சிரிப்பையும் மீறி சிறிது திகைப்பினை தருகிறது !!!!
தூரிகையை அடைந்தும் ,
ஓவியத்தை அடையாத
வர்ணத்தின் துளிகளக்கும் ;
எண்ணத்தில் உதித்தும் ,
காகிதத்தை அடையாத
கவிதையின் வார்த்தைகளுக்கும் ;
கோவிலில் இருந்தும் ,
பூசையினை அடையாத
தெய்வங்களின் சிற்பங்களுக்கும் ;
மனதில் வாழ்ந்து
நிஜத்தில் மரித்த
என் காதலுக்கும் ;
பேச வார்த்தைகள் இருந்தும்
பகிர்ந்துகொள்ள வலிகள் இருந்தும்
மௌனத்திலேயே அஞ்சலி செலுத்துகிறோம்
எங்களின் நிராகரிப்புகளுக்கு !!
பேசாத வார்த்தைகளும்
பகிராத வலிகளும்
அமைதியாய் கண்ணீர் சிந்தின
எங்களுக்காக!!!
முயற்சிக்காத எவருக்கும்
கானல் நீரும் கடலாய் தெரியும் !
முயற்சிக்கும் எவருக்கும்
இமயமும் இரண்டடி உயரமாய் தெரியும் !
ரசனையில்லா எவருக்கும்
அழகு ஓவியமும் அவலமாய் தெரியும் !
ரசிக்கத் தெரிந்த எவருக்கும்
சிதைந்த சிற்பமும் அழகாய் தெரியும் !
அர்த்தம் புரிந்தால் எவருக்கும்
ஈரடியிலும் ஈராயிரம் கருத்துக்கள் தெரியும் !
புரிந்திடா நிலையெனில் எவருக்கும்
ஒருவரியும் ஓராயிரம் வரிகளாய் தெரியும் !
சென்றிட மனமிருந்தால் எவருக்கும்
செவ்வாய் கிரகமும் பக்கமாய் தெரியும் !
செல்வதை தவிர்த்திடும் எவருக்கும்
செல்லுமிடம் வானளவு தூரமாய் தெரியும் !
சாதிக்க நினைக்கும் எவருக்கும்
தடைகள் யாவு
நான் கூண்டில் அடைக்கப்படவில்லை ;
என் சிறகுகள் வெட்டப்படவில்லை ;
என் கால்களும் கட்டப்படவில்லை ;
ஆனாலும் பறக்க இயலவில்லை !
காரணம் தேடி களைத்தபோது,
கண்டறிந்தேன் மனத்தில் உரமில்லையென்று!!
மற்றவை அனைத்தையும் மறுத்து ;
தைரியத்தை வளர்த்திருந்தால் தடைகளை
தகர்த்து வானத்தை அளந்திருப்பேன்!!
அனைத்தையும் கொடுத்து, துணிவை
கொன்றதால் ,
வானத்தின் மேலிருக்கும் வாழ்க்கையை
இழந்து ,
நிலத்தில் வீழ்ந்து கிடக்கின்றேன் !!!!