பொம்மையின் சொந்தங்கள்

உணவூட்டி ,குளிப்பாட்டி
தலைவாரி ,தாலாட்டி
தூங்கிய பின் முத்தம் தந்து ,
என அம்மாவாய் அனைத்தையும்
செய்யும் என் மகள் ,
என்னை பாட்டி என்றும் ;
அவரை தாத்தா என்றும் ,
தன் பொம்மையிடம் சொல்லும்போது ,
சிரிப்பையும் மீறி சிறிது திகைப்பினை தருகிறது !!!!

எழுதியவர் : சக்தி வினோ (18-Dec-14, 12:15 pm)
பார்வை : 94

மேலே